Wood Cutter Dream Story

Tamil:

ஓரூரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழப்பு நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர மரம் ஆகும். 

இந்த விஷயம் அவனுக்கு தெரியாது, அப்பொழுது தென்றல் காற்று சில்லென்று வீசியது. அது அவனுக்கு சுகமாக இருந்தது. இம்மாதிரியான நேரத்தில் ஒரு பஞ்சுமெத்தை இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று அவன் மனதில் நினைத்தான். 

என்ன ஆச்சரியம்! 

அடுத்த கணம் அவன் அருகில் ஒரு கட்டிலும் அதில் பஞ்சு மெத்தையும் வந்து சேர்ந்தது. விறகு வெட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உடனே அவன் அதில் ஏறிப் படுத்தான். நாள் முழுவதும் கடினமாக  உழைத்ததால் அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது.  இந்த சமயத்தில் முதுகு, கை, கால் பிடித்து விட இளம் பெண் ஒருத்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதில் எண்ணினான்.

என்ன அதிசயம்! 

அடுத்த கணம் அங்கு ஓர் இளம்பெண் தோன்றி அவனுடைய கை கால்களை பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். விறகு வெட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை, அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான், அவன் ஆச்சரியப்பட்டான். நினைப்பதெல்லாம் நடக்கின்றதே இவ்வளவு சுகங்கள் இருந்தும் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினியாக இருக்கிறோமே! இப்பொழுது அறுசுவை உணவு இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று எண்ணினான். 

மறுகணமே தங்கத்தட்டில் அறுசுவை உணவு வந்தது. பல வகை உணவுகள் வந்தன, விறகுவெட்டி அனைத்தையும் வயிறார உண்டான். “உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்ப விறகு வெட்டிக்கு உறக்கம் வந்தது, படுத்தான். 

அவன் மனதில் திடீரென்று ஒரு பயம் தோன்றியது. “நாம் காட்டில் தனியாக அல்லவா  இருக்கிறோம்?. இப்பொழுது ஒரு சிங்கம் ஒன்று நம் முன் வந்து நம்மை கொன்று விட்டால் என்னவாகும்?” என்று நினைத்தான். 

மறுகணம் அவன் முன்னால் ஒரு சிங்கம் தோன்றி அவனை கொன்று விட்டது. 

நீதி : நம் என்னம் படி தான் நம் வாழ்க்கை அமையும். நாம் உயர்ந்தவற்றை, நல்லதை எண்ணினால் நம் வாழ்க்கை நல்லதாகவே அமையும். தவறான எண்ணங்களை எண்ணினால் நம் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். எனவே நாம் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும்.

English:

He was cutting a piece of wood in Orur. Every day he used to go to the forest from the village boundary to cut firewood and sell it to the villagers.

One day he was chopping firewood as usual. Then he got tired. He lay down in the shade of a tree there. The tree is a magical tree that gives whatever one wishes.

He did not know this, and the breeze blew. It was comfortable for him. He thought to himself how good it would be to have a cotton mattress at a time like this.

What a surprise!

The next moment a bed with a cotton mattress came near him. The woodcutter could not contain his joy. Immediately he climbed into it and lay down. He had been working hard all day and his whole body ached. At this time, he thought how much better it would be to have a young woman instead of holding his back, arms and legs.

What a miracle!

The next moment a young woman appeared there and held his hands and feet. The woodcutter did not understand anything, he was flooded with joy, he was surprised. Even though we have so many pleasures, we are starving without food! Now he thought how good it would be to have delicious food.

The next moment the delicious food arrived on a golden plate. Many kinds of food came, and the woodcutter devoured them all. As the saying goes, “Eating is the same as the throat,” the woodcutter fell asleep and lay down.

A sudden fear appeared in his mind. “Aren’t we alone in the forest? Now what if a lion comes before us and kills us?” He thought that.

The next moment a lion appeared in front of him and killed him.

Justice : Our life is what we want it to be. If we think high and good, our life will be good. If we entertain wrong thoughts our life will be full of misery. So we should think higher.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *